<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

செவ்வாய், 16 மே, 2017

8 மணி நேர வேலைக்கு மாத ஊதியம் ரூ.18 ஆயிரம் பனியன் தொழிலாளர் சங்க மகாசபை கோரிக்கை

தீக்கதிர் செய்தி

8 மணி நேர வேலைக்கு மாத ஊதியம் ரூ.18 ஆயிரம்
பனியன் தொழிலாளர் சங்க மகாசபை கோரிக்கை







திருப்பூர், மே 15-

8 மணி நேர வேலைக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும் என சிஐடியு பனியன் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் மகாசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.திருப்பூர் பனியன் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் (சிஐடியு) 36வது தலைமை மகாசபை திங்களன்று துவங்கியது. சங்கத்தின் தலைவர் சி.மூர்த்தி கொடியேற்றி வைத்து தலைமை தாங்கினார். சிஐடியு மாநில துணை பொது செயலாளர் ஆர்.கருமலையான் துவக்க உரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணை தலைவர் கே.காமராஜ், மாவட்ட செயலாளர் கே.ரங்கராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். சங்க பொதுச்செயலாளர் ஜி.சம்பத், பொருளாளர் வி.நடராஜன் ஆகியோர் அறிக்கையை முன்வைத்து பேசினர்.
மாநில துணை தலைவர் எம்.சந்திரன் நிறைவுரையாற்றினார். இக்கூட்டத்தில் திரளான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.தீர்மானங்கள்திருப்பூர் மாவட்ட இ.எஸ்.ஐ மருந்தகங்களுக்கு போதிய மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமிக்க வேண்டும். எட்டு மணிநேர வேலைக்கு மாத ஊதியமாக ரூ.18 ஆயிரம் வழங்க வேண்டும். பெண்கள் பணியாற்றும் நிறுவனங்களில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி பாலியல் புகார் கமிட்டி அமைத்திட வேண்டும். காண்ட்ராக்டர் முறையை கைவிட வேண்டும். தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக அமலாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வுஇம்மகாசபையில் சங்கத்தின் தலைவராக சி.மூர்த்தி, உதவி தலைவர்களாக கே.காமராஜ், எம்.சந்திரன், பி.சந்திரசேகர், ஜி.ராஜா, பொதுச்செயலாளராக ஜி.சம்பத், செயலாளர்களாக எம்.என்.நடராஜ், கே.நாகராஜ், ஆர்.மாணிக்கம், ஜே.சங்கர், பொருளாளராக ஏ.ஈஸ்வரமூர்த்தி மற்றும் 33 பேர் கொண்ட புதிய கமிட்டி உறுப்பினர்கள், 9 பேர் அழைப்பாளர்களாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக