<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

செவ்வாய், 16 மே, 2017

போக்குவரத்து ஊழியர்கள் பணிக்கு திரும்ப உயர் நீதிமன்றம் உத்தரவு

தீக்கதிர் செய்தி

மதுரை, மே 16 –
போக்குவரத்து ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம், வருங்கால வைப்பு நிதி என ரூ. 7 ஆயிரம் கோடி அளவிலான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்கக் கோரி வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இதனால், தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக பேருந்துப் போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிக் கிடக்கிறது. ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதில் அக்கறை காட்டாத தமிழக அரசு, டிராக்டர் மற்றும் லாரி ஓட்டுநர்களையும், அரைகுறை ஓட்டுநர்களை வைத்து பேருந்துகளை இயக்கி வருகிறது. இதனால் ஆங்காங்கே விபத்துக்களும் நடந்து வருகின்றன.
இந்நிலையில், போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தத்தை சட்டவிரோதம் என்று அறிவிக்கக் கோரி, ஒத்தக்கடையைச் சேர்ந்த செந்தில் குமரய்யா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். நீதிபதி முரளிதரன் சேஷசாயி அமர்வு முன்பு செவ்வாயன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, “போக்குவரத்து ஊழியர்கள் உடனடியாக பணிக்குத் திரும்ப வேண்டும்” என்று உத்தரவிட்ட நீதிபதி, “அப்படி பணிக்குத் திரும்பாவிட்டால் ‘எஸ்மா’ சட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்கலாம்” என்று கூறினார். இவ்விஷயத்தில் போக்குவரத்து அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக