<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

செவ்வாய், 16 மே, 2017

அரசு பேருந்து விபத்து: இளம்பெண் பலி


தீக்கதிர் செய்தி
திருப்பூர், மே 16-
திருப்பூரில் தற்காலிக ஓட்டுநர் ஓட்டி வந்த அரசு பேருந்து மோதி இளம் பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் பாண்டியன் நகரைச் சேர்ந்தவர் சேகர்என்பவரின் மகன் பச்சையப்பன் (39). இவர் செவ்வாயன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையம் பகுதியில் இருந்து வீட்டுக்கு செல் வதற்காக அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்போது, திருப்பூர் டைமண்ட் திரையரங் கம் அருகே பெண்கள் இருவர், போதிய பேருந்துகள் இல்லாததால் இருசக்கரவாகனத்தில் அழைத்து செல்லுமாறு கேட்டுள்ளதாக தெரிகிறது.
இதையடுத்து அவர்கள் மூவரும் இருசக்கர வாகனத்தில் நடராஜ் திரையரங்கம் பாலத்தில் சென்ற போது, அவ்வழியாக தாராபுரத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற மூவரும் படுகாயம் அடைந்தனர். இதில் வைஜெயந்தி (20) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த பச்சையப்பன் மற்றும் வாகனத்தில் பயணித்த மற் றொரு பெண் பலத்த காயம் அடைந்த நிலையில் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே, அரசு போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக போக்குவரத் துக் கழகத்தின் சார்பில் தனியார் பேருந்து ஓட்டுநரான கதிரவன் என்பவரை தற்காலிக ஓட்டுநராக பணி நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கடந்த இரு நாட்களாக தாராபுரம் பணிமனையிலிருந்து பேருந்து ஓட்டி வந்த நிலையிலேயே அவர் ஓட்டி வந்த பேருந்து தற்போது விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்துள்ளது. இந்த விபத்து நடைபெற்றதை தொடர்ந்து அவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த விபத்து குறித்து மத்திய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக