<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

திங்கள், 15 மே, 2017

கரூர், ஜூலை-24,சிஐடியு கரூர் மாவட்ட 7-வது மாநாடுபள்ளப்பட்டியில் ஜூலை 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில்முதல் நாள் அரவக்குறிச்சியில் உள்ளவாரச்சந்தையில் இருந்து மாபெரும்பேரணி துவங்கி, பேருந்துநிலையத்தில் (தோழர் ஆர்.உமாநாத் நினைவு திடலில்) அமைக்கப்பட்ட பொதுக்கூட்ட மேடை அருகில் நிறைவடைந்தது. பின்னர் நடைபெற்ற பொதுக் கூட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் சி.முருகேசன் தலைமை வகித்தார். மாநாட்டு வரவேற்புக்குழு தலைவர் து.ரா.பெரியதம்பி வரவேற்று பேசினார். சிறப்புரையாற்றிய சிஐடியு மாநிலதுணைப் பொதுச்செயலாளர் ஆர்.கருமலையான் பேசியதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதி இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் முழுவதும் பெரும் பிரபலமாகிவிட்டது. தேர்தலுக்கு பணம் கொடுத்து அதனால் தேர்தலை ரத்துசெய்துள்ளது இதுவே முதல்முறையாகும். தமிழ்நாட்டை ஆளும் அதிமுகவும், ஆண்ட திமுகவும் மக்களை ஏமாற்றுவதில் ஒரே கொள்கைகளை கொண்டவர்கள். எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக அல்லாத கட்சிக்கு அரவக்குறிச்சி மக்கள் வாக்களிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் மக்களின் வாழ்வாதாரத்தையும், சிறு, குறு தொழிலாளர்களையும் மற்றும் மத்திய, மாநில அரசு ஊழியர்களின் எதிர்காலத்தையும் அழிக்கும் செயலில் தனியார் பெரும் முதலாளிகளிடம் கூட்டு சேர்ந்து பெரிய சூழ்ச்சியை செய்துவருகிறது. இதனை தடுத்துநிறுத்திடவும், மக்களையும், தொழிலாளர்களையும் பாதுகாத்திட செங்கொடியின் கீழ் தெருவில் இறங்கி போராட்டம்நடத்தினால் மட்டுமே முடியும். செப்டம்பர் 2-ம் தேதி நடைபெறவுள்ள பொது வேலை நிறுத்தத்தில் அனைத்துத் தரப்பு தொழிலாளர்களும், சிறு மற்றும் குறு தொழில் நடத்துபவர்களும் கலந்துகொண்டு வெற்றிபெறச் செய்திட வேண்டும் என்று பேசினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.ஜீவானந்தம், மூத்த தலைவர் ஜி.ரத்தினவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, மாநாட்டு வரவேற்புக்குழு பொருளாளர் கே.வி.கணேசன், சிபிஎம் அரவக்குறிச்சி ஒன்றியச் செயலாளர் எம்.ஆறுமுகம் ஆகியோர் பேசினர். சிஐடியு அரவக்குறிச்சி ஒன்றிய செயலாளர் சி.ஆர்.ராஜாமுகமது நன்றி கூறினார்.


சுமங்கலி திட்டத்தில் பணியாற்றும் பெண்கள் 16 வயது, 14 வயது பெண்களாக உள்ளனர். அவர்களை பெண்கள் என்று சொல்லக் கூடாது. குழந்தைகள் என்று தான் சொல்ல வேண்டும். பள்ளிக்கூடத்தில் தேர்வு முடிந்தவுடன் விடுமுறை நாட்களில் சுற்றுலா என்று புரோக்கர்கள் அழைத்து வந்து மில்லுக்குள் வேலை வாங்குகிறார்கள். விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்தவுடன் நாங்கள் மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று கோருகிற போது மில் நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை. அதனால் அந்த குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்று சுவர் ஏறிக் குதிக்கிறார்கள். இப்படி குழந்தைகளை மில்லுக்குள் அடைத்து வைத்து கொடுமைப்படுத்துவது சட்டவிரோதம். தொழிற்சாலை சட்டப்படி ஒரு தொழிலாளியை 8 மணி நேரத்திற்கு பிறகு தொழிற்சாலைக்குள் வைத்திருக்க முடியாது. அதுவும் குற்றமாகும்.
சமீபத்தில் மோடிஅரசு கொண்டு வந்த தொழிற்சாலை சட்டப்படி கூட ஒரு தொழிலாளி பத்தரை மணி நேரம் வரை வேலை வாங்கலாம். அதற்கு மேல் வேலை வாங்க அனுமதியில்லை. ஆனால் இந்த குழந்தைகளின் இளமைக்காலம் முழுவதும் அடைத்து வைத்து உழைப்பைச் சுரண்டுகிற மில்கள் தமிழகம் முழுவதும் உள்ளன. மில் நிர்வாகங்களின் இப்படிப்பட்ட காட்டு தர்பாருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.சிஐடியு பஞ்சாலைத் தொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் பி.எம்.குமார் தான் அந்த வழக்கைதொடுத்தார். நானும் அந்த வழக்கில் ஒரு வாதியாக சேர்க்கப்பட்டுள்ளேன். சுமங்கலி திட்டம் மில்லில் தடைசெய்யப்பட்டுள்ளதாக அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளது. ஆனால் கடந்த வாரம் திண்டுக்கல்லில் உள்ள எவரெடி மில்லில் இருந்துதப்பிக்க முயன்று சுவர் ஏறி குதித்தசம்பவம் மில்களில் சுமங்கலி திட்டம் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மீதான புகார்கள் பற்றி நடவடிக்கை எடுக்காத திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள மாவட்டஆட்சியர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், தொழிலாளர்துறை அதிகாரிகள், தொழிற்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரையும் உயர்நீதிமன்ற குற்றவாளிக்கூண்டில் சிஐடியு ஏற்றும்.


திருநெல்வேலி, ஏப். 30-தமிழகத்தில் திமுக -அதிமுக என எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் டாஸ் மாக் ஊழியர்களின் கோரிக் கைகளை கண்டு கொள்வ தில்லை என நெல்லையில் நடைபெற்ற டாஸ்மாக் ஊழி யர் சம்மேளன மாநில மாநாட்டில் சிஐடியு மாநில துணைப் பொதுச்செயலா ளர் ஆர்.கருமலையான் குறிப்பிட்டார்.நெல்லையில் சி.ஐ.டி.யு டாஸ்மாக் ஊழியர்கள் சம் மேளனத்தின் 3 வது மாநில மாநாடு பாளையங்கோட் டையில் கொடியேற்றத்து டன் துவங்கியது. சங்க மாநி லத் துணைத் தலைவர் ஆல் தொரை கொடியேற்றிவைத் தார். சம்மேளனத் தலைவர் ஜெயபிரகாசன் தலைமை தாங்கினார். வரவேற்புக் குழுத் தலைவர் ம.ராஜாங்கம் வர வேற்றுப் பேசினார்.
சம் மேளனச் செயலாளர் வேல் முருகன் அஞ்சலி தீர்மானம் வசித்தார். மாநாட்டை சிஐ டியு மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர்.கருமலை யான் மாநாட்டைத் துவக்கி வைத்துப் பேசினார்.மாநாட்டில் அவர் பேசி யதாவது: கடந்த 9 ஆண்டு களுக்கு மேலாக தங்களது வியர்வையையும் ரத்தத்தை யும் சிந்தி கடுமையாக உழைத் துக் கொண்டிருக்கிற டாஸ் மாக் ஊழியர்களை அரசு மூர்க்கத்தனமாக நடத்துகி றது. அந்த ஊழியர்களின் நிச்சயமற்ற எதிர்காலத்தை அரசு கேலியாக வேடிக்கை பார்க்கிறது. அரசிற்கு வரு வாயை வாரிவழங்கிக் கொண் டிருக்கிற டாஸ்மாக் ஊழி யர்கள், அர சின் இதர துறை ஊழியர்களை போல் கம்பீர மாக நடக்க முடியாமல் குற்ற உணர்வுடன் கூனிக் குறுகி நடக்கின்றனர். அரசு அவர்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை அமைத்துத் தர மறுக்கிறது.டாஸ்மாக் ஊழியர் களை அரசு அவமதிப்பது ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷ யமல்ல.
தற்காலிக ஒப்பந்தத் தொழிலாளர் முறையை தொடர்ந்து சி.ஐ.டி.யு எதிர்த் துப் போராடி வருகிறது. கடைநிலை ஊழியர்களுக் கும் குறைந்தபட்ச மாத ஊதி யம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது சிஐடியு வின் கோரிக்கை .ஆனால் திமுக -அதிமுக ஆகிய இரு அரசுகளும் ஊதியம் பற்றி தொழிற்சங்க அமைப்பு களை அழைத்துப் பேச மறுக்கின்றன.திமுக -அதிமுக என இந்த இருகட்சிகளும் மாறி ,மாறி ஆட்சி செய்தாலும் டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளைக் கண்டு கொள்வது கிடையாது. டாஸ் மாக் ஊழியர்களின் உழைப் பைச் சுரண்டுவதில், அவர் களை அவமதிப்பதில் இந்த இரு அரசுகளுக்கும் வேறு பாடில்லை. டாஸ்மாக் ஊழி யர்களின் போராட்டங் களுக்கு சி.ஐ.டி.யு வின் இதர அனைத்துத்துறை ஊழியர் களும் தொடர்ந்து ஆதரவு அளிப்பர். இவ்வாறு கரு மலையான் பேசினார்.மாநாட்டை வாழ்த்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் இரா .பாலசுப் பிரமணியன் பேசினார். சம் மேளன பொதுச் செயலா ளர் கே.பழனிவேலு சம்மேள னப் பொருளாளர் ஆறு முகம் ஆகியோர் அறிக்கை சமர்ப்பித்தனர். அதைத் தொடர்ந்து விவாதம் நடை பெற்றது.நிறைவு நாளான செவ் வாயன்று முக்கிய தீர்மானங் கள் நிறைவேற்றப்படுகின் றன. சிஐடியு மாநிலப் பொதுச் செயலாளர் அ.சவுந்தர ராசன் எம்.எல்.ஏ நிறைவுரை யாற்றுகிறார். மாநாட்டு நிறைவில் பாளை லூர்து நாதன் சிலை அருகில் இருந்து டாஸ்மாக் ஊழியர்கள் பேரணியாகப் புறப்பட்டுச் செல்கின்றனர். தொடர்ந்து பாளை மார்க்கெட் ஜவகர் மைதானத்தில் பொதுக் கூட்டம் நடைபெறுகிறது.கோவை, மார்ச் 23-
தமிழகத்தில் தற்போது நிலவும் கடும் மின்வெட்டிற்கு காரணம் முந்தைய திமுக ஆட்சியும் தற்போதைய அஇஅதிமுக ஆட்சியும் போட்டிபோட்டு அமலாக்கும் உலகமய, தாராளமயம் மற்றும் தனியார் மயக் கொள்கைகளே என மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆர். கருமலையான் குற் றம் சாட்டினார்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், கோவை சிங்கை நகரக்குழு சார்பில் வியாழனன்று மின்வெட்டிற்கு எதிரான மற்றும் நூல்கள் வெளியீட்டு விழா நிகழ்ச்சியும் நடந்தன. முன்னதாக எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் துவங்கி மின்வெட்டிற்கு எதிரான இருசக்கர வாகனப் பிரச்சாரம், கோவை வடக்கு நகரக்குழு சார்பில் கண்ணப்பன் நகரில் துவங்கிய நடைப்பயணப் பிரச்சாரமும் ஆவாரம்பாளையம் ரெட்ரோஸ் மைதானத்தில் நிறைவடைந்தன. பின்னர் அங்கு நடந்த கருத்தரங்கில் சிறப்புரையாற்றிய ஆர். கருமலையான் பேசியதாவது:கேந்திரமான தொழில் நகரான கோவை கடந்த சில ஆண்டுகளாக மின்வெட்டால் முடங்கிப் போயுள்ளது.
ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கோடி அந்நியச் செலாவணி ஈட்டித்தரும் திருப்பூரிலும் மின்வெட்டாலும், தொழில் நெருக்கடியாலும் லட்சக்கணக்கானோர் வேலை இழந்துள்ளனர். இரண்டு நகரங்களிலும் முதலீட்டாளர்கள், சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் பட்டறை அதிபர்கள் பெருத்த நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். இவர்களை ஒழித்துக்கட்டும் முனைப்போடு மத் திய, மாநில அரசுகள் தொடர்ந்து நாசகரக் கொள் கைகளை அமலாக்கி வரு கின்றன. தமிழகத்தின் மொத்த மின்தேவை 12 ஆயிரம் மெகாவாட்டாக உள்ளது. 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கான கட்டமைப்புகள் ஏற்கனவே இங்கு நிறுவப்பட்டுள்ளன. ஆனால் தற்போது 2500 மெகாவாட் பற்றாக்குறையாக உள்ளதால் தொழில்துறையினர்.
மாணவர்கள், பொது மக்கள் என அனைத்துப் பகுதியினரும் மின் வெட்டால் புழுங்குகின்றனர். இதற்கான காரணம் என்ன? சென்னையைச் சுற்றிலும் திமுக ஆட்சிக் காலத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நிய மூலதன கம்பெனி கள் அனுமதிக்கப்பட்டன. அதற்கு முன்னரே ரூ. 60 ஆயிரம் கோடி அந்நிய முதலீடுகள் தமிழகத்தில் இருந்தன. இந்தப் பன்னாட்டு நிறுவனங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்குவதும், தடைஏற்பட்டால் அரசே அவர்களுக்கு தண்டத்தொகை செலுத்த வேண்டும் என்பதும் புரிந்துணர்வு ஒப்பந்தம். எனவேதான் பன்னாட்டு நிறுவனங்களுக்கு 24 மணிநேர தடையில்லா மின்சாரம் வழங்கிவிட்டு தன் சொந்த மக்களை கடும் மின்வெட்டில் தள்ளி விட்டிருக்கிறார்கள். எனவே தற்போதைய தொழில் நஷ்டம், வேலை இழப்பு, மின்வெட்டினால் ஏற்படும் கஷ்டம் அனைத்திற்கும் காரணம் திமுக, அதிமுக ஆட்சிகளும், மத்திய அரசும் போட்டி போட்டு அமலாக்கும் உலகமய, தாராளமய தனியார் மயக் கொள்கைகளே.
தற்போது, உலகில் எரிசக்தி யுத்தம் துவங்கி விட்டது. அமெரிக்காவிடம் இந்தியா பணிவதும், காதல் கொண்டு கசிந்துருகுவதும் எரிசக்தி சார்யுத்தத்தினால் தான். தற்போதும், முதல்வர் ஜெயலலிதாவை ஹிலாரி சந்தித்ததும் அந்நிய மூலத னத்தின் வேட்டைக் காடாக தமிழகத்தை மாற்றுவதற்குதான். நேரு காலத்தில், இந்தியாவின் எரிசக்தி கொள்கையில் மின்சாரம், எரிவாயு முதலில் வீட்டு உபயோகம், பின்னர் விவசாயம், தொழில் துறை என்று வகுக்கப்பட்டது. ஆனால் இப் போது அனைத்துத் துறையும் தாக்குதலுக்குள்ளாகியிருக்கிறது.
எனவே அனைத்து தரப்பினரையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் மின்சார வெட்டை எதிர்த்து வாலிபர்கள் நடத்தும் இந்தப் போராட்டம் ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கம் கொண்டது. சுதந்திரம், இறையாண்மையை பாதுகாப்பதும் ஆகும். இவ்வாறு அவர் பேசினார்.
நூல்கள் வெளியீடு
முன்னதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் எழுதியுள்ள ‘வளர்ச்சியில் லாபம், வறுமையில் வேலை’ என்ற புத்தகத்தை மாணவர் நல பெற்றோர் சங்க கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வி. தெய்வேந்திரன் வெளியிட்டார்.
இதனை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோவை கோட்டக் செயலாளர் வி.சுரேஷ் பெற்றுக்கொண்டார். தீக்கதிர் துணை ஆசிரி யர் எஸ்.பி.ராஜேந்திரன் எழுதிய ‘ராஜாளியைத் துரத்தும் ஊர்க்குருவிகள்’ என்ற புத்தகத்தினை தீக்கதிர் கோவைப் பதிப்பின் பொறுப்பாசிரியர் எம். கண்ணன் வெளியிட முன் னாள் மாமன்ற உறுப்பினர் ஆர். சந்திரசேகரன் பெற் றுக் கொண்டார். நிகழ்ச்சியில் வாலிபர் சங்க மாநிலப் பொருளாளர் எஸ்.பாலா மற்றும் மாவட்டச் செயலாளர் அ.ர.பாபு, சிங்கை நகரத் தலைவர் ஆ.மேகநாதன், செயலாளர் மூர்த்தி, வடக்கு நகரச் செயலாளர் பா.கா.முருகேசன் மற்றும் அருள் பிரகாசம் உள்ளிட்டோர் பேசினர். கருத்தரங்கில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

1990களில் நெல்லை மாவட்டத் தில் கொடூராமான சாதிய மோதல்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். சில பத்திரிகைகள் கூட அப்போது இந்த கொலைகளை கிரிக்கெட் ஸ்கோர் போல “நாள்தோறும் இந்தப்பக்கம்” இன்று இத்தனை பேர் சாவு ; ‘ அந்தப்பக்கம்’ இன்று இத்தனை பேர் சாவு என செய்திகள் வெளியிட்ட சோகம் நிகழ்ந்தது.
இடதுசாரி இயக்கங்கள் மட்டும் மக்கள் ஒற்றுமைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் தொழில் ரீதியாக இம்மாவட்டத்தின் பின்தங்கிய நிலை மையை போக்குவதற்கும் தொடர்ந்து போராடின. இந்த பின்னணியில் தான்நீதியரசர் மோகன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் – சாதிய மோதல் களை தடுக்க திட்டவட்டமான தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு வழிவகைகளை பரிந்துரை செய்தது. நவீன தாராளமயமும் 1990களில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வந்தபின்னணியில் அந்நிய மூலதன வருகைக்கு இரத்தினக் கம்பளம் விரிக்கஆளும் வர்க்கமும் சகல ஏற்பாடுகளை யும் செய்துக் கொண்டிருந்த நேரம்.
நெல்லை மாவட்டத்தில் மதுரை கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் திருநெல்வேலிக்கு வடக்கே சுமார் 20 கி.மீ. தூரத்தில் கங்கைகொண்டான் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 2073.86 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து ஏற்கனவே மாநில தொழிற் வளர்ச்சிக் கழகத்திடம் (சிப்காட்) ஒப்படைத்திருந்தது. இதில் 1379.60 ஏக்கர் நிலத்தில் தொழில் வளர்ச்சி வளாகத்தை சிப்காட் உருவாக்கியது. 1998க்கு முன்னும், பின்னும் ஆட்சியில் இருந்த பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் தலைமை யிலான அரசுகள் அந்நிய மூலதனம், பன்னாட்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் உழைப்புச் சுரண்டலை தங்குதடையின்றிசெய்திட அனைத்துஏற்பாடுகளையும் சட்டப்பூர்வமாக்கியது. இந்த அடிப்படையில் தான் சிறப்பு பொருளாதார மண்டலம் (ளுநுண) என்ற சுதந்திரப் பொருளாதார மண்டலத்தின் புதிய அவதாரம் தோன்றியது.
இங்கு தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்த வேண்டியது இல்லை; நடப்பில் உள்ள அமலாக்க பிரிவுகளோ, தொழிற் சங்கமோ உள்ளே நுழைய கூடாது. நமது நாட்டிலேயே இது ‘ஒரு வெளிநாடு’ போன்ற அந்தஸ்து அளிக்கப்பட்டது. அப்போது தான் அந்நிய மூலதனம் பாதுகாப்பாக முட்டையிட, அடைகாக்க, குஞ்சுபொறிக்க முடியுமாம். இந்த மூலதனப் பெருக்கத்திற்கு கொள்ளை லாப பெருக்கத்திற்கு அனைத்து வசதிகளையும் மத்திய, மாநில அரசுகள் போட்டியிட்டு செய்தன.
இந்தச் சூழலில் தான் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க அரசிற்கும், ஏடிசி டயர் கம்பெனி என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. கங்கை கொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற் வளர்ச்சி வளாகத்தில் சுமார் 115 ஏக்கர் நிலம் அடிமாட்டு விலைக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்குக் கொடுப்பது; இந்த ஆலைப்பகுதி மட்டும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என அவசரப் பிரகடனம் செய்வது; ‘அத்தியாவசியப் பணி’ என அவசர அரசாணை வெளியிடுவது; தொழிலாளர் சட்டங்களை நிர்வகிக்க விசேஷ ஏற்பாடு; ஏற்கனவே கோகோ கோலாவிற்கு தாமிரபரணி தண்ணீரை தாரைவார்த்த சிப்காட் இந்த டயர் கம்பெனிக்கு தாராளமாக வழங்கும்; 100 சதம் ஏற்றுமதி சார்ந்த நிறுவனம் என்ற முறையில் மத்திய- மாநில அரசுகள் வரிச்சலுகைகள் அனைத்தும் வாரிவழங்கும் என முடிவாகியது. அனைத்தும் அந்நியச் செலவாணியை பெருக்க என ஆனந்த சர்மாக்களும், சிதம்பரங்களும் கூறினர். 2009ம் ஆண்டு இந்த ஏடிசி டயர்ஸ் கம்பெனி செயல்படத் துவங்கியது. ஆரம்பத்தில் 400 கோடி ரூபாய் மூதலீடு செய்யத் திட்டம் தயாராகியது. இந்த ஏடிசி டயர்ஸ் நிறுவனம் என்பது சாலையில்லா காடுகள், கழனிகள், சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள், டிராக்டர்கள் போன்றவற்றிற்கான ராட்சச டயர்களை உற்பத்தி செய்வதில் உலகிலேயே பிரசித்தி பெற்றது.
இந்தியாவில் பால கிருஷ்ணா டயர்ஸ் என்ற கம்பெனியை சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய அசோக் மற்றும் யோகேஷ் மகன்ஷாரியா குழுமம் தனது தொழில் முனைவோர் அறிவைக்கொண்டு, இஸ்ரேலிய தொழில் நுட்பத்தோடு இணைந்து, அமெரிக்க மூதலீட்டு நிறுவனங்களின் மூல தனத்தோடு சங்கமமாகி பிறந்தது தான் ஏடிசி டயர்ஸ் கம்பெனி.ஆரம்பத்தில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளிகள்; அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளிகள்; கங்கை கொண்டான் கிராமத்தைச் சுற்றிய சுமார் 20க்கும் மேற்பட்ட இளந்தொழிலாளிகள்; தாமிரபரணி கருணையை இழந்த இந்த கிராமங்களின் முதல் தலைமுறை தொழிலாளிகள்; பெரும்பாலோர் 25 வயதுக்குட்பட்டவர்கள்; சம்பளம் நாளொன்றுக்கு ரூ. 85 முதல் ரூ. 100வரை; 12 மணி நேரத்திற்கு மேல் உழைப்பு; போதாக்குறைக்கு வடபுலத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இதைவிட குறைந்த கூலிக்கு கூடுதல் நேரம் வேலை செய்ய தயாராகியிருந்தனர்; டயர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயன மூலப்பொருட்களின் நெடி; இதற்கு மத்தியில் தான் இந்த நவீன கொத்தடிமைகள் உழைக்க வேண்டும். நாட்டில் எந்த ஒரு சட்டமும், இவர்களை பாதுகாக்க எட்டிப்பார்க்க முடியாது.
18ம் நூற்றாண்டில் தொழிற் புரட்சியை அடுத்த இங்கிலாந்து நாட்டின் பாட்டாளி வர்க்கம் பற்றி ஏங்கெல்ஸ், இ.பி. தாம்ஸன் மற்றும் பேரா. எரிக்ஹாப்ஸ்பாம் போன்றவர்களின் வர்ணணையை ஒத்த நிலைமையை இங்கு காண முடிந்தது. இந்த நிலைமைகளை சித்தரிக்க ஒரு சார்லஸ் டிக்கன்சும், சார்லி சாப்ளினும் இல்லை என்ற ஏக்கம் அவ்வப்போது நிழலாடுவதுண்டு.இந்தப் பின்னணியில் தான் இந்த தொழிலாளிகளில் சிலர் இந்த கட்டுரையாளரோடு(அப்போதைய நெல்லை மாவட்ட சிஐடியு செயலாளர்) தொடர்பு கொண்டு கொடுமைகளை விளக்கினர். தனது உள்ள கொதிப்பை- சுரண்டலின் உச்சத்தை விவரித்தனர். அவசரப்பட வேண்டாம், தக்க சமயத்தில் வினையாற்ற துவங்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.
அலைபேசி எண்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.2010ம் ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் ஒரு வடமாநில மேலதிகாரி ஒரு தொழிலாளியை கொச்சையான வார்த்தைகளால், பழைய பிரிட்டிஷ் லங்காஷயர் மேஸ்திரி போன்று திட்டித் தீர்த்து விடுகிறான். மற்றொரு இந்திக்கார தொழிலாளி ( தமிழை அரைகுறையாக கற்றுக் கொண்டவர்) தனது சகோதரர் தமிழ் தொழிலாளிக்கு நேர்ந்த அவ மானத்தை பொறுக்கமாட்டாமல் மொழி பெயர்த்து சொல்லிவிடுகிறார்.ஏற்கனவே வெதும்பிக் கொண் டிருந்த, அடங்கிக் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொண் டது. ஆலை முழுவதும் உள்ள 1000க் கும் மேற்பட்ட தொழிலாளிகளும் தன் னெழுச்சியான போராட்டங்களில் இறங்கிட்டனர். உடனே லோக்கல் கரை வேட்டி கட்சிக்காரர்கள் வருகின்றனர்; காவல்துறையும் வருகிறது; காரியமாக வில்லை. போராட்டம் தீவிரமடைகிறது. கட்டுரையாளரின் அலைபேசி எண் ணை கார்பன் கரியும், ரப்பரும், கருப் பாக்கியது போக மீதம் இருந்த துண்டு சீட்டிலிருந்து ஒரு தொழிலாளி கண்டு பிடித்து தொடர்பு கொள்கிறார். அடுத்த அரைமணி நேரத்தில் சிஐடியு அங்கு இருக்கிறது.
சிஐடியு தலை வர்களை கண்டவுடன் கழகங்களின் கரைவேட்டிகள் பின்வாங்கின. காவல்துறை மட்டும் சற்று நேரம் ‘சட்டம்’ குறித்து சண்டப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தது. சுட்டெரிக்கும் வெயில்; அந்த 2500 ஏக்கரிலும் பாஞ்சாலங்குறிச்சி உடைமுள் மரம் ஒன்றிரண்டு தவிர ஒதுங்கி நிற்க எதுவும் இல்லை. தொழிலாளிகள் அனைவரும் அந்த பட்டப் பகல் வெயிலில் அந்த பொட்டல் காட்டு ‘பொதுக்குழுவில்’ சிஐடியுவில் சேர தீர்மானித்து விட்டனர். நிலைமையை பார்த்து சுதாரித்த காவல் துறை பின்வாங்கியது.போராட்டம் புதிய பரிணாமம் பெற்றுவிட்டது. எட்டு மணி நேர வேலை, சம்பள உயர்வு, பணிநிரந்தரம், குடிநீர் வசதி, கழிப்பறை ஏற்பாடுகள், அடையாள அட்டை, ஈஎஸ்ஐ, பிஎப் எனகோரிக்கை பட்டியல்கள் உருவாகி விட்டன. 53 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்.
வேலை நிறுத்தத்தை உடைக்க உள்ளூர் கைக்கூலிகளின் உதவியை நாடியது நிர்வாகம், இது போதவில்லை என சிறப்புப் பொருளாதார மண்டல அதிகாரிகளையும் அணுகியது. ஒன்றும் பலிக்கவில்லை என்று தெரிந்தவுடன் நிர்வாகம் காலவரையின்றி கதவடைப்பு செய்துவிட்டது. இரண்டு மாதங்கள் அந்த போராட்டத்தை நிலைபெறச் செய்ய நெல்லை மாவட்டத் தொழிலாளி வர்க்கம் துணை நின்றது. மீனாட்சிசுந்தரம், சுப்பிரமணியம் போன்ற 15 தொழிலாளிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கிராமம் கிராமமாக தொழிலாளிகளின் ‘சிறப்புப் பேரவை’ கூட்டங்கள், வீடுவீடான சந்திப்புகள் நடத்தி தைரியப்படுத்தப்பட்டனர். இறுதியாக போராட்டம் வெற்றிபெற்றது. எட்டுமணிநேர வேலை, 10 ரூபாய் சம்பள உயர்வு, ஈஎஸ்ஐ, பிஎப் ஏற்பாடுகள் மிகைநேர பணிக்கு அற்பமான கூடுதல் ஊதியம், குடிநீர், கழிவறை ஏற்பாடுகள் என கோரிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அமலாகத் துவங்கியது. நிர்வாகம் நிலைமையை புரிந்து கொண்டு இடையில் ஒரு சமரச ஏற்பாட்டிற்கு உடன்பட்டது. காண்ட் ராக்ட் தொழிலாளிகள் படிப்படியாக நிரந்தரமாகினர்.
அடுத்து இரண்டு ஆண்டுகள் பழகுநர், அடுத்த 6 மாதம் தகுதிகாண் பருவம், பின்னர் நிரந்தரத் தொழிலாளி என்ற அந்தஸ்து படிப்படியாக தொழிலாளியின் கனவு நனவாக துவங்கியது. முதன்முதலாக கடந்த அக்டோபர் மாதம் 158 பேர் நிரந்தரமாகினர். 85 ரூபாய் ஊதியம் 280 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக இந்த மூன்று ஆண்டுகளில் உயர்ந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் 30ந் தேதி நிரந்தரத் தொழிலாளிகளுக்கும், அடுத்து நிரந்தரம் ஆகும் தொழிலாளிகளுக்கு பழகுனர்க்கும், தகுதிகாண் பருவத் தொழிலாளிக்கும் ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன்படி கூடுதலாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூபாய் 6800/லிருந்து 7,000/ வரை கிடைக்கும். அதாவது சராசரி 550 ரூபாயிலிருந்து 630 ரூபாய் வரை நாளொன்றுக்கு சம்பளம் கிடைக்க ஒப்பந்தம் ஆகியது. காண்ட்ராக்ட் தொழிலாளிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1000/ கூடுதலாகக் கிடைக்கும்.
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சிஐடியுவிற்கு சங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுவிட்டது. இதர சட்டப்பூர்வமான சலுகைகளும் வழங்க நிர்வாகம் ஒத்துக் கொண்டது மூன்று ஆண்டுக்கால ஒப்பந்தம். இவை அனைத்திலும் அயராது அலைந்த நெல்லை மாவட்ட சிஐடியு தலைவர்கள், ஆர். மோகன், எம். ராஜாங்கம், எம். சுடலைராஜ், எஸ். வெங்கட்ராமன், பி. முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஆலைமட்ட தலைவர்கள் சக்திவேல், ராஜன் ஆகியோரின் பங்களிப்பும் ஈடுபாடும் அளப்பரியது. தொழிலாளிகள் வர்க்க ஒற்றுமையின் பலனை தற்போது ருசிக்கத் துவங்கி விட்டனர்.
தென்கறை- தாழ்த்தப்பட்ட தொழிலாளியும், சீவலப்பேரி பிற் படுத்தப்பட்ட தொழிலாளியும், தாழை யூத்து இஸ்லாமியத் தொழிலாளியும், அனைத்தலையூர் கிறிஸ்துவத் தொழிலாளியும், ஜார்க்கண்ட் பிர்ஷ முண்டாவின் வாரிசுகளான ஆதிவாசி வகுப்பை சார்ந்தவரும் முதலில் ஒரே டம்ளரில் டீ குடிக்க துவங்கினர். பின்னர் கேன்டீனில் சமமாக சாப்பிட ஆரம்பித்தனர். தற்போது இவர் வீட்டுதிருமணத்திற்கு அவரும், அவர்வீட்டு திருமணத்திற்கு இவரும் பந்தி பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மத்தியில் மறு வீட்டு விருந்து / அழைப்புகளும், அதிகரித்துவிட்டன.
இந்த ஒற்றுமையை கூலி உயர்வு போராட்டம்உழைப்பிற்கும் மூலதனத்திற்குமிடையிலான போராட்டம் தான் உருவாக்கி உள்ளது. அது அப்படித்தான் உருவாக்க முடியும். அதோடு நின்று விடாமல் மூல தனத் தோடு மோதி தீர்க்க வேண்டிய முழு போருக்கு இவர்களின் ‘ உணர்வு நிலை யை’ உயர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்முன் உள்ளது
கட்டுரையாளர் : சிஐடியு, உதவிப் பொதுச் செயலாளர்


இன்று திருப்பூர் பனியன் சங்க மகாசபை. 12மணி முதல் 16மணி வரை உழைப்பு. ஞாயிறு விடுமுறை கூட கனவாகி கொண்டு வருகிறது. மூன்று லட்சம் உழைப்பாளிகள்.முக்கால் வாசி பேர் பீஸ்ரேட் உழைப்பு. ஒவ்வொரு ஆண்டும் இவர்கள் புதிய தொழிலாளியாக அவதாரம் எடுப்பர்-ஆனால் ஆண்டு பல பணிசெய்தவர்கள்.குடும்பமே உழைத்து குறைந்த பட்ச கூலிக்கும்,பிழைப்புக்குமான ஏக்கம்.உழைப்பு சுரண்டலின் உச்சம் தாண்டவம் ஆடுகிறது.1990ல் 289.85 கோடியாக இருந்த ஏற்றுமதி 25000கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.உள்நாட்டு தேவை பயன்பாட்டுக்கு 8000கோடி உற்பத்தி செய்து உள்ளனர். ஆனால் தொழிலாளர்களின் தற்கொலையில் தலைநகராக திருப்பூர் திகழ்கிறது. பீகாரிலிருந்து புலம்பெயர்ந்து வந்தவர்களை சந்தித்தேன். இந்த சுரண்டலை ஒழிக்க தோழர்கள் ஆர்வமாக விவாதித்தனர். அதற்கான அமைப்பாக மாற்ற உறுதி எடுத்தனர். இருப்பினும் அந்த மனபாரம் கணக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக