<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

செவ்வாய், 16 மே, 2017

பல்வேறு பகுதிகளில் நடந்த போராட்டங்கள்(தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்)


செய்தி  = தீக்கதிர்

நிலுவைத் தொகையை உடன் வழங்கக்கோரி அனைத்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில், மே 16 -


தமிழக அரசுப் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்த போராட்டத்தின்இரண்டாம் நாளான செவ்வாய்க்கிழமை நாகர்கோவில் ராணித்தோட்டம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியுமாவட்டச் செயலாளர் கே.தங்கமோகன் தலைமை தாங்கினார். தொமுச மாவட்டச் செயலாளர் வி. இளங்கோ துவக்கவுரையாற்றினார்.
இதில் சிஐடியு நிர்வாகி எம்.சுந்தரராஜ், ஏஐடியுசி நிர்வாகி பி.தயானந்தன், தொமுச நிர்வாகி சிவன் பிள்ளை,டிடிஎஸ்எப் நிர்வாகி விஜயகுமார், ஓய்வுபெற்ற தொழிலாளி அய்யாதுரை, தொமுச மாவட்டத் தலைவர்ஞானதாஸ் ஆகியோர் உரையாற்றினர். சிஐடியு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.லட்சுமணன் நிறைவுரையாற்றினார்.இதில் சிஐடியு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் சங்கரநாராயண பிள்ளை, ஏஐடியுசி நிர்வாகி ராமச்சந்திரன், எச்எம்எஸ் நிர்வாகி ஆபத்துகாத்த பிள்ளை, எம்எல்எப் நிர்வாகி சந்திரன், ஐஎன்டியுசி ஓய்வுபெற்றோர் சங்க தலைவர் சிவலிங்கம், தொமுச நிர்வாகி கனகராஜ், டிடிஎஸ்எப் நிர்வாகி சண்முகம், எஸ்சி,எஸ்டி நிர்வாகி சௌத்ரி, தேமுதிக நிர்வாகி அண்ணாதுரை ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் இரண்டாவது நாளாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. திருநெல்வேலிஅரசுப் போக்குவரத்துத் தொழிலாளர் பிரச்சனைகளை தமிழக முதல்வர் தலையிட்டு பேசி தீர்வுகாண வேண்டி நெல்லை வண்ணார்பேட்டை புறவழிச்சாலை பணிமனைமுன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச மாநில அமைப்பு செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்ட துணைத் தலைவர் ம.ராஜாங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.மோகன்,மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பெருமாள், ஏஐடியுசி நிர்வாகி ராதாகிருஷ்ணன், எச்.எம்.எஸ் நிர்வாகி சுப்பிரமணியன், பணியாளர் சம்மேளனம் நிர்வாகி சந்தானம், சிஐடியு நிர்வாகிகள் காமராஜ், வெங்கடாசலம், சாலை போக்குவரத்துத் தொழிலாளர்சங்க மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.முருகன் உட்பட போக்குவரத்து தொழிலாளர்கள் கலந்து கொண்டு பேசினர்.
செவ்வாய்க்கிழமையன்றும் பெரும்பாலான அரசுப் பேருந்துகள் ஓடவில்லை.தூத்துக்குடிதூத்துக்குடியில் செவ்வாயன்று 66சதவீதம் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.தூத்துக்குடி பணிமணை முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக தொழிற்சங்கத் தலைவர்மரியதாஸ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், திமுக தொழிற்சங்கச் செயலாளர் அழகு, சிஐடியுநிர்வாகி ஜான் கென்னடி அலெக்ஸாண்டர், ஓய்வுபெற்ற ஊழியர் சங்கம் சகாயராஜ், பலவேசம், ஏஐடியுசி ராதாகிருஷ்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர். மேலும், சிபிஎம் நிர்வாகிரசல், சிபிஐ நிர்வாகி ஞானசேகர்உட்படபலர் ஆதரவு தெரிவித்து பேசினர்.

மதுரை, மே 16-13-
வது ஊதிய ஒப்பந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். ஓய்வூதியம், நிலுவைத் தொகையை வழங்க உடனடியாக ரூ. 2ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்கள் மே 15-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். தொழிலாளர்களின் போராட்டத்தை முறியடிக்க நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியிலேயே முடிவடைந்தன.
வேலை நிறுத்தம் 15-ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தாலும் தொழிலாளர்கள் தன்னெழுச்சியாக திரண்டு மே 14-ஆம்தேதி மாலையே ஆங்காங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர்.செவ்வாயன்றும் மாநிலத்தில் பெரும்பாலான பேருந்துகள் இயக்கப்படவில்லை. தனியார் பள்ளி-கல்லூரிகளில் ஓட்டுநராக பணியாற்றுபவர்களைக் கொண்டு அரசு பேருந்துகளை இயக்கமுயற்சிகள் மேற்கொண்டது. அதிலும் அரசுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.போராட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாயன்று போக்குவரத்து தொழி லாளர்கள் தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி பேருந்து நிலையங் களில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். சென்னை, மதுரை, விருதுநகர், திண்டுக்கல், சேலம், கோவை, திருச்சி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சென்னை பல்லவன் இல்லத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆயிரத் திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். போராட்டத்தில் பங்கேற்றதொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினர். ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் திரண்டதால் அப்பாதை ஒரு வழிப்பாதையாக மாற்றப் பட்டது.
திருவில்லிபுத்தூர், மே 16-
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் 15ஆம்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நிலுவைத் தொகைகளை உடனடியாக வழங்குதல். ஊதிய உயர்வுஉள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து போராடி வருகிறார்கள். ஆயினும் தமிழக அரசுபாராமுகமாகவே இருப்பதால் திருவில்லிபுத்தூர், இராஜபாளையம் பகுதிகளில் பேருந்து நிலையம் முன்பு போக்குவரத்து தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவில்லிபுத்தூரில் தொமுசசார்பில் முருகேசன், ஏஐடியுசி சார்பில் சோமசுந்தரம், சிஐடியுசார்பில் முனீஸ்வரன் ஆகியோர்தலைமை தாங்கினர். தமிழ்நாடுஅரசு ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர் மாவட்டச் செயலாளர் தங்கப்பழம் ஆர்ப்பாட்டத்தை வாழ்த்திப் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் தொழிற்சங்கத்தின் சார்பில் ஜான் பிரிட்டோ, பாதுகாப்பு பேரவை சார்பில் தங்கவேல், பார்வர்டுபிளாக் சங்கத்தின் சார்பில் மாரியப்பன் உட்பட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். இராஜபாளையம்இராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தொமுச சார்பில் திருவேட்டை போத்தி சிஐடியு சார்பில் சன்னாசி, ஏஐடியுசி சார்பில் தர்மசாஸ்தா ஆகியோர் தலைமை தாங்கினர். தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாரியப்பன் வாழ்த்திப் பேசினார்.
புதிய தமிழகம் சங்கத்தின் சார்பில்காளிமுத்து, டிடிஎஸ்எப் சங்கத்தின் சார்பில் ராமசாமி, பாதுகாப்பு பேரவை சார்பில் மோகன்குமாரமங்கலம், விசிக சங்கத்தின்சார்பில் அழகர்சாமி, மதிமுகதொழிற்சங்கத்தின் சார்பில்குருவையா உட்படதொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து செவ்வாயன்று (மே 16) தமிழகம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதன் ஒரு பகுதியாக தென்சென்னை மாவட்டம், டிஎம்எஸ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கோவை, மே 16-
அரசு போக்குவரத்து ஊழியர்களின் தொடர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றன.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வி.செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் எஸ். குமார், பொருளாளர் ராங்கராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
உதகை
உதகையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக முன்பு
நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் உதகை வட்டக் கிளை துணை தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஆனந்தன், செயலாளர் அஸரா, வட்ட கிளை செயலாளர் விஷ்ணுதாசன், சிஐடியு மாவட்ட செயலாளர் ஜே.ஆல்தொரை, போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் ராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மேட்டுர் வருவாய்துறை அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டத் தலைவர் கே.கலையரசு தலைமை வகித்தார். இதில் அரசு ஊழியர் சங்க துணைத் தலைவர் என்.கே.வெற்றிவேல், வட்ட செயலாளர் து.சிங்கராயன், போக்குவரத்து ஊழியர் சங்க நிர்வாகிகள் செம்பான், மல்லிகா அர்ச்சுணன், அன்பழகன், ஓய்வூதியர் சங்கத்தின் என்.கோபால், மின் ஊழியர் சங்க வி.இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்று ஆதரவு முழக்கங்களை எழுப்பினர்.
கோவை, மே 16-
அரசு போக்குவரத்து ஊழியர்களின் இரண்டாம் நாள் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக கோவையில் 98 சதவீத பேருந்துகள் இயங்கவில்லை. இதனால் கோவையில் பொது போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை மீதானபேச்சுவார்த்தை தோல்வியடைந்ததை அடுத்து ஞாயிற்றுகிழமை முதல் போக்குவரத்து ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.திங்களன்று காலை 25 சதவிகித பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் மாலையில் பெரும்பாலான பேருந்துகள் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் செவ்வாயன்றும் போராட்டம் தொடர்ந்த நிலையில் வெறும் 5 சதவிகித பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டது. இதனால் கோவை நகரம் பொது போக்குவரத்து இன்றி முற்றிலும் முடங்கியது.சேலம்போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போக்குவரத்து தொழிலாளர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எல்பிஎப் சங்க பொது செயலாளர் மணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு போக்குவரத்து சங்க செயலாளர் டி.செல்வகுமார், பொருளாளர் ஏழுமலை உள்ளிட்ட அனைத்து சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக